60 டிஎம்சி நீரை திறந்துவிட எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம்
டெல்லி: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு இந்த ஆண்டு கிடைக்க வேண்டிய மீதமுள்ள 60 டி.எம்.சி. நீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி வந்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் பேசுகையில்.
இந்த ஆண்டு காவிரியில் 140 டி.எம்.சி. அளவு நீரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. மீதம் 60 டி.எம்.சி. நீர் வழங்கப்பட வேண்டும். இதை உடனடியாக வழங்குமாறு கர்நாடக முதல்வர் எதியூரப்பாவிற்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி அதிகார ஆணையத்தை கூட்டும்படி கர்நாடகா கோரியுள்ளது. இதற்கு தமிழகமும் தயார். அங்கு எங்களது குறைகளை கூறுவோம்.
இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு போதுமான நீர் உள்ளது. ஆனால், சம்பா சாகுபடிக்குத் தான் பிரச்சனை வரும்போலத் தெரிகிறது. எனவே தான் 60 டி.எம்.சி. நீரை தமிழகம் கேட்கிறது.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் உரிய நீரை தமிழகம் தரவில்லை என்று கேரளா கூறுவது தவறு. கேரளாவினய் சோலையாறில் 12.3 டி.எம்.சி. நீரை தமிழகம் விடுவித்துள்ளது.
ஆனால் அதற்கு மேலும் அவர்கள் பம்ப் வைத்து நீரை உறிஞ்சிக் கொண்டு, தண்ணீரே தரவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை மறுஆய்வு செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை.
மணல்மேடு என்ற இடத்தில் 7.2 டி.எம்.சி. நீரை அளிப்பதற்காக சிற்றணை கட்ட வேண்டுமென தமிழகம் வலியுறுத்தியும் அதை கேரளா அனுமதி மறுத்து வருகிறது.
நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு தமிழகம் எப்போதுமே ஆதரவு தெரிவித்து வருகிறது என்றார் துரைமுருகன்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications