போலி தங்க காசு விற்று பல லட்சம் மோசடி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போலி தங்க காசு கொடுத்து பல லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு மோசடி கும்பல் சில தினங்களுக்கு முன் திருச்செந்தூருக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டம் சோனகன்விளை, கூரத்தான்விளை, நாலுமாவடி உள்பட பல கிராமங்களுக்கு தங்க காசுகளை குறைந்த விலைக்கு விற்பதாக கூறியுள்ளனர்.
திருச்சி சமயபுரத்தை சேர்ந்தவர்கள் என்றும் முன்னோர்கள் சேமித்து வைத்திருந்த பொற்காசுகள் எங்களிடம் நிறைய உள்ளது. பணக்கஷ்டம் காரணமாக அதை குறைந்த விலைக்கு விற்பதற்காக இங்கு வந்தோம் என்றும் அந்த கும்பல் உருக்கமாக பேசியுள்ளது.
இதை நம்பிய சிலர் அவர்களிடம் இருந்து தங்க காசுகளை வாங்கியுள்ளனர். ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் காசுகளை வெறும் 500 ரூபாய்க்கு தருவதாக அந்த கும்பல் கூறியதால் அப்பகுதி மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்க காசுகளை வாங்கினர். சோதனை செய்தபோது அது உண்மையான தங்கம்தான் என்றும் தெரிய தெரிந்தது.
இதைத் தொடர்ந்து அந்த கும்பல் மீண்டும் தங்ககாசுகளுடன் அந்த கிராமங்களுக்கு சென்றது. உண்மையான தங்கம், குறைந்த விலையில் கிடைக்கிறது என்று அப்பகுதி மக்கள் கடன் வாங்கி தங்க காசுகளை வாங்கியுள்ளனர். தங்கக் காசுகளை விற்றுவிட்டு அந்த கும்பல் உடனே சென்று விட்டது.
மறுநாள் அந்த தங்க காசுகளை சிலர் சோதித்து பார்த்தனர். அப்போது அவை தங்க மூலம் பூசப்பட்ட பித்தளை காசுகள் என தெரிய வந்தது. முதலில் உண்மையான தங்க காசுகளை கொடுத்து நம்ப வைத்து பின்னர் போலி காசுகளை கொடுத்து ஏமாற்றியதும் தெரிய வந்தது.
திருச்செந்தூர் பகுதியில் மட்டும் 450க்கும் மேற்பட்ட போலி தங்க காசுகளை கொடுத்து பல லட்ச ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாவட்ட எஸ்பியின் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு மோசடிக் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications