சிபிசிஐடி போலீஸார் தேடப்பட்ட எஸ்ஐ, ஏட்டு கோர்ட்டில் சரண்
நெல்லை: போதை பொருள் கடத்தியதாக பொய் வழக்கு பதிவு செய்த வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் தேடப்பட்டு வந்த எஸ்ஐ, ஏட்டு ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
தூத்துக்குடியை சேர்ந்த தொழிலதிபர் ஜான்பால் என்ற மன்னன். இவர் போலி பத்திரங்கள் மூலம் வங்கியில் சுமார் 1 கோடி ருபாய் வரை கடன் வாங்கி மோசடி செய்தார். இதுகுறித்து வங்கி மேலாளர் தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
ஜான்பால் தன்னுடைய உதவியாளர் ஈஸ்வரமூர்த்தியிடம் தனக்கு பதிலாக குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு கூறினார். இதற்கு அவர் மறுக்கவே அவரை போதை பொருள் கடத்தல் வழக்கில் திட்டமிட்டு சிக்க வைத்தார்.
இதுகுறித்து மேல்விசாரணை நடத்திய போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஈஸ்வரமூர்த்தி மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து நெல்லை சிபிசிஐடி போலீசார் இதில் தொடர்புடைய ஜான்பால், வக்கீல் முத்துகுமார், பாபு, ரவுடி நல்லகனி, போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் காந்தி, எஸ்ஐ ராஜமாணிக்கம் என்ற ராஜ்குமார், ஏட்டு லுயிஸ் செல்வராஜ் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து போலீஸார் மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஜான்பால், நல்லகனி, பாபு, இன்ஸ்பெக்டர் காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராஜமாணிக்கம், லூயிஸ் செல்வராஜ், வக்கீல் முத்துகுமார் ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தனர்.
இவர்களை பிடிக்க சிபிசிஐடி போலீஸார் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் ராஜ்குமார், லூயிஸ் செல்வராஜ் ஆகியோர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications