சென்னை: ரூ.4,150 கோடியில் அசோக் லேலண்டு-நிசான் தொழிற்சாலை
சென்னை: தமிழகத்தில் அசோக் லேலண்டு மற்றும் நிசான் ஆகியவை இணைந்து ரூ.4,150 கோடியில் புதிய கார் தொழிற்சாலையை அமைக்கவுள்ளன.
இத் திட்டத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
வாகன தயாரிப்பில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமான அசோக் லேலண்டு சென்னைக்கு அருகில் எண்ணூரில் தொழிற்சாலையை அமைத்துள்ளது. மேலும் ஓசூர் மற்றும் ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் 5 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.
இந் நிறுவனம் ஜப்பானின் நிசான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுக்கு 1 லட்சத்து 90,000 வாகனங்களைத் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. 3 கூட்டு திட்டங்கள் மூலம் இந்தத் தயாரிப்புப் பணியில் இரு நிறுவனங்களும் இறங்கவுள்ளன.
இது தவிர ஆண்டுக்கு 1 லட்சம் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் தயாரிக்கும் ஒரு திட்டத்தையும் அசோக் லேலண்டு செயல்படுத்தவுள்ளது.
எண்ணூர்-ஓசூர்-பிள்ளைப்பாக்கம்:
இந்த வாகன தயாரிப்பு தொழிற்சாலைகள் எண்ணூர், ஓசூர், பிள்ளைப்பாக்கம் போன்ற இடங்களில் ரூ.4,150 கோடி முதலீட்டில் அமையவுள்ளன.
இதன் மூலம் 4,500 பேருக்கு நேரடியாகவும், ஏறத்தாழ 13,500 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
இத்தொழிற்சாலை மூலம் கிடைக்கும் முதலீடு அசோக் லேலண்டு மற்றும் நிசான் நிறுவனங்கள் மூலம் தமிழகத்திற்கு வந்துள்ள மிகப் பெரிய முதலீடாகும்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இந்த தொழிற்சாலைகளுக்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் தொழில்துறை முதன்மைச் செயலாளர் எம்.எஃப். பாரூகி, அசோக் லேலண்டு நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சேஷசாயி, நிசான் நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆன்ட்ரூ பால்மர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஏற்கனவே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டெய்ம்லர் நிறுவனமும் இந்தியாவின் ஹீரோ நிறுவனமும் இணைந்து சிப்காட் ஒரகடம் தொழிற் பூங்காவில் வணிக வாகனங்கள் திட்டத்தை அமைத்து வருகின்றன.
இப்போது அசோக் லேலண்ட் மற்றும் நிசான் ஆகியவை இன்னொரு வாகன தயாரிப்பு ஆலையை அமைக்கின்றன.
இவை அனைத்தும் சென்னைக்கு மேலும் மேலும் சிறப்புகளைச் சேர்க்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications