ஆந்திரா-ஒரிஸ்ஸாவை நெருங்கும் புதிய புயல் சின்னம்
டெல்லி: வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள புயல் ஆந்திரா, ஒரிஸ்ஸாவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸாவை ஒட்டியுள்ள மேற்கு-மத்திய வங்க கடலில் 2 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதனால் வடக்கு ஆந்திராவிலும் ஒரிஸ்ஸாவிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த மூன்று நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.
இதற்கிடையே புயல் சின்னம் மேலும் வலுவடைந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸா கடற்கரையை நோக்கி தீவிரமாக நகர்ந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகம், ஒரிஸ்ஸா, அந்தமான் நிக்கோபர் தீவுகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மிக பலத்த மழை பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் மேலும் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications