சிபிஐ கட்சி உறுப்பினர்கள்: புதுசு 1.28 லட்சம் - நழுவியது 75,000
டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 1.28 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இதில் அதிகம் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. அதேசமயம், 75 ஆயிரம் பேர் கட்சியை விட்டு விலகியுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய உறுப்பினர்களாக 1,28,546 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 70 சதவீதம் பேர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பீகார் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களாவர். அதே சமயம் பழைய உறுப்பினர்கள் சுமார் 75,097 பேர் தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளவில்லை. இது அக்கட்சிக்கு இழப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி கூறுகையில்,
1.28 லட்சம் பேர் புதிதாக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் வட மாநிலங்களில் இணைந்துள்ள உறுப்பினர்கள் போதுமானதாக இல்லை. கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 6,53,462ஆக உயர்ந்துள்ளது.
இளைஞர்கள், பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் மலைவாழ் மக்கள் அதிகளவில் கட்சியில் இணைந்துள்ளனர். இந்தாண்டு மட்டும் 3,521 கிளைகள் அமைக்கப்பட்டு, கட்சி வளர்ச்சிப் பணி நடந்து வருகிறது.
பதிவு செய்யாத உறுப்பினர்கள், வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து, அதனால் புதுப்பிக்க முடியாமல் போயிருக்கலாம். பழைய உறுப்பினர்களை தலைவர்கள் சந்திக்காமல் இருப்பது, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இடம் பெயருவதால் அந்த பகுதியில் உறுப்பினர்கள் புதுப்பிக்க முடியாமல் போவது போன்ற காரணங்களும் உள்ளன என்று தெரிவித்தார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications