விஜயனைக் கொலை செய்ய கருணாவுடன் கொட்டமடித்த பானு!
எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில், அவரது மனைவி சுதாவின் கூடப் பிறந்த தங்கையான பானுமதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நியமித்த கூலிப் படையின் தலைவனான கருணா என்கிற கருணாகரன் உள்ளிட்ட பலரும் கைதாகியுள்ளனர்.
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் பானுமதியின் மறுபக்கம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது செயல்பாடுகள் எம்.ஜி.ஆரி.ன் புகழுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவையாக, அவற்றைக் குலைக்கும் வகையில் இருப்பது போலீஸாரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
புவனா மூலம் கருணாவின் அறிமுகம் பானுமதிக்கு கிடைத்ததும், அவரை வைத்து விஜயனை தீர்த்துக் கட்ட தீர்மானித்தார். ஆனால் ஆரம்பத்தில் கருணா ஒத்து வராதது போல நடித்துள்ளார். பானுமதியின் நிலையைப் பார்த்த அவர், அவர் மூலம் விஜயனை தீர்த்துக் கட்டி விட்டு, பானுமதியின் வசம் இருந்த பள்ளியைக் கைப்பற்றி விட வேண்டும் என்பதுதான்.
இதனால் ஆரம்பத்தில் ஒத்து வராதது போல பிகு செய்துள்ளார் கருணா. இதையடுத்து அவரிடம் நைச்சியமாக நடந்து கொண்டால்தான் கருணா ஒத்து வருவார் என புவனா கூறியுள்ளார். இதையடுத்து கருணாவின் விருப்பம் போல நடக்க ஆரம்பித்துள்ளார் பானுமதி.
அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்துள்ளார். கருணாவுடன் தினசரி இரவு ஷோ படம் பார்க்கப் போவது, கிளப்களுக்குப் போவது, விருந்துகளில் பங்கேற்பது, நட்சத்திர ஹோட்டல்களில் போய் தங்குவது என அத்தனையையும் செய்துள்ளார். கருணா கேட்ட அனைத்தையும் கொடுத்துள்ளார் பானு.
சாதாரண அக்கா - தங்கை சண்டை, கூலிப்படை, கொலை என போயுள்ளது எம்.ஜி.ஆர். பக்தர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பானு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்













Click it and Unblock the Notifications