அண்ணா நூற்றாண்டு: 1405 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை
சென்னை: அண்ணா நூற்றாண்டையொட்டி தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 1,405 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாவின் நூற்றாண்டையொட்டி தமிழக சிறைச் சாலைகளில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்களில், 15.9.2008 அன்று 7 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துள்ளவர்களுக்கும், 60 வயதும் அதற்கும் மேலாகாவும் வயதுள்ள 5 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துள்ளவர்களுக்கும் அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படி, விடுதலை அளிப்பதென கவர்னரின் ஒப்புதலைப் பெற்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி தமிழகத்தின் பல்வேறு சிறைகளிலிருந்தும் 22 பெண் கைதிகள் உள்பட 1405 ஆயுள் தண்டனைக் கைதிகள் 15.9.2008 அன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
1405 கைதிகளும் எந்தெந்த சிறைகளிலிருந்து விடுதலையாகிறார்கள் என்ற விவரத்தை சிறைத்துறை டிஜிபி நடராஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி ஆசியாவின் மிகப் பெரிய சிறையான புழல் சிறையிலிருந்து 111 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
கோவை மத்திய சிறையிலிருந்து 296 பேரும், பாளை. மத்திய சிறையிலிருந்து 273 பேரும், மதுரையிலிருந்து 266 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்.
திருச்சியிலிருந்து 174 கைதிகளும், கடலூரிலிருந்து 128 பேர், வேலூரிலிருந்து 122 பேரும் விடுதலை செயய்ப்படுகின்றனர்.
சேலம் சிறையிலிருந்து 10 கைதிகள், வேலூர் பெண்கள் சிறையிலிருந்து 9 பேர், திருச்சி பெண்கள் சிறையிலிருந்து 7 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்.
இதுதவிர கேரள சிறையில் இருக்கும் 3 தமிழக கைதிகளும் விடுவிக்கப்படுவதாக நடராஜ் தெரிவித்துள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications