கருணாநிதியின் குடும்ப ஆட்சியை முறியடிப்போம்: ஜெ.
சென்னை: அண்ணா பிறந்த நாளில், தமிழகத்தில் இருந்து வரும் குடும்ப ஆட்சியை முறியடிப்போம் என வீர சபதம் ஏற்போம் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: அன்னைத் தமிழ் உணர்ந்தோர், அறிந்தோர் அனைவரையும் மகிழ்வூட்டும் நாள் அண்ணாதுரை பிறந்த நாள். 15ம் தேதி அவரது நூற்றாண்டு விழா காணும் நாள்.
பிறர் கருத்தை மதிப்பவர். ஆயினும் தன் கருத்தில் உறுதி உடையவர். சூழ்ச்சி வலை பின்னும் தலைவராக அவர் இருந்ததே இல்லை. பாரம்பரியம் பெற்ற காங்கிரஸ் கட்சியை, 1967ம் ஆண்டு தேர்தலில் வீழ்த்திக் காட்டியவர் அண்ணாதுரை.
"இந்த வெற்றியின் மூலம் எனக்குச் சேர வேண்டும் என்று நினைக்கிற அனைத்துப் புகழும் எம்.ஜி.ஆரை மட்டும் தான் சாரும். எனவே, நீங்கள் அனைவரும் ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று உங்களது வாழ்த்துக்களைச் சொன்னால், என் கடமையில் நான் உயர்ந்து நிற்பேன்' என, அண்ணாதுரை கூறியதை, உணர்வுடையவர்கள் ஏற்றனர்.
அண்ணாதுரையின் இதயக்கனியாக விளங்கிய எம்.ஜி.ஆரையே காயப் படுத்தினார்; துன்புறுத்தினார் கருணாநிதி. நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயன் பெறும் கம்ப்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சி, யோகா பயிற்சி, ஓட்டுனர் பயிற்சி, நூலகம் அமைத் தல் ஆகிய பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தின் சுயநலவாதி கருணாநிதியின் மாய் மால ஏமாற்றுக் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சென்று, அவரது குடும்ப ஆட்சியை முறியடிக்க வீர சபதம் ஏற்போம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications