தீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பை?
{image-mumbai map250_16092008.jpg tamil.oneindia.com}மும்பை: டெல்லியைத் தொடர்ந்து அடுத்து மும்பைக்கு தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை ஜெய்ப்பூர், பெங்களூர், அகமதாபாத், டெல்லி என நான்கு பெருநகரங்களில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர். சூரத் நகரில் அவர்கள் வைத்த பெருமளவிலான குண்டுகள் அதிர்ஷ்டவசமாக வெடிக்காததால், சூரத் நகரம் தப்பியது.
இதனால் மத்திய அரசு பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் கேள்விக் கனைகளிலிருந்து தப்ப முடியாமல் தவித்து வருகிறது.
இந்த நிலையில், தீவிரவாதிகள் அடுத்து மும்பையை தங்களது இலக்காகக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு இ மெயில் மூலம் குறிப்பிட்டு மிரட்டியுள்ளது. டெல்லி சம்பவத்தைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட அந்த இ மெயிலில், உங்களது நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருகிறோம். உங்களை ரத்தம் சிந்த வைப்பதற்கு ஏற்ற தருணத்தை பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்.
அந்தேரி, மோத்ராநகர், அன்சார் நகர் (மும்பையில் உள்ளவை) பகுதிகளில் இரவு வேளைகளில் நீங்கள் நடத்திய அதிரடி சோதனை பற்றியும், முஸ்லீம்களை நீங்கள் துன்புறுத்தியதையும்,சித்திரவதை செய்ததையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்.
அவர்களை கொலை செய்து விடுவோம் என நீங்கள் மிரட்டியுள்ளீர்கள். மவுலானா மகமது உல் ஹசனை என்ன செய்கிறோம் பாருங்கள் என்று கூறி அவமானப்படுத்தும் வகையில், நடந்து கொண்டிருக்கிறீர்கள்.
அது மட்டுமின்றி, முஸ்லீம் பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளிடம் முறை தவறி நடந்திருக்கிறீர்கள்.
இதுதான் உங்கள் அராஜகத்தின் எல்லை என்றால், இத்தகைய நடவடிக்ைககளால் எங்களை எச்சரிக்க நினைத்தால், மும்பை மாநகர மக்கள் அனைவருக்கும் இந்தியன் முஜாஹிதீன் இயக்கம் எச்சரிக்கை விடுக்கின்றது.
எதிர்காலத்தில் உங்கள் மீது மரணத் தாக்குதல் நடத்துவோம். இதற்கெல்லாம் காரணம் மும்பை பயங்கரவாத தடுப்பு போலீஸாரும், அவர்களின் பாதுகாவலர்களான விலாஸ்ராவ் தேஷ்முக் (மகாராஷ்டிர முதல்வர்), ஆர்.ஆர்.பாட்டீலும் தான் (துணை முதல்வர்).
நீங்கள் ஏற்கனவே கொலைப் பட்டியலில் இருக்கின்றீர்கள். இந்த முறை மிக மிக தீவிரமாக இருக்கிறீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
வழக்கம் போல இந்த மெயிலிலும் அல் அர்பி, அல் ஹிந்தி என கையெழுத்திடப்பட்டுள்ளது. இது இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவராக கருதப்படும் தெளகீரின் கையெழுத்து என்பது குறிப்பிடத்தக்கது. இவரது புகைப்படத்தைத்தான் சமீபத்தில் போலீஸார் கைப்பற்றினர். இவரை தற்போது போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மெயில் மூலம் போலீஸாரின் விசாரணை மற்றும் அவர்களின் நடவடிக்ைககளை தீவிரவாதிகள் படு தீவிரமாக, நெருக்கமாக கண்காணித்து வருகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதல் படை முகாமிட்டிருப்பதாகவும் போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
இதைத் தொடர்ந்து மும்பையில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மின்சார ரயில்கள், ஷேர் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அதி பலத்தபாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications