ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி இலவசமாக விநியோகித்த திமுக நகராட்சி தலைவர்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தமிழக அரசு தொடங்கியுள்ள கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அரிசியை மொத்தமாக வாங்கி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவசமாக விநியோகித்துள்ளார் திமுக நகராட்சித் தலைவர் ஒருவர்.

திண்டுக்கல் நகரில் நேற்று ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில், திண்டுக்கல் நகராட்சித் தலைவர் நடராஜன், நகரில் உள்ள 6 ரேஷன் கடைகளிலும் மொத்த அரிசியையும் தனது பணத்தைக் கொடுத்து வாங்கினார்.

பின்னர் இந்தக் கடைகளில் உள்ள 4,130 ரேஷன் கார்டு தாரர்களுக்கும் கார்டுக்கு 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி அசத்தினார்.

இதற்கான தொகை ரூ.82,600ஐ நகராட்சி தலைவர் நடராஜன் கூட்டுறவு இணைப்பதிவாளர் கார்த்திகேயனிடம் வழங்கினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+