அமெரிக்கா: இந்திய மாணவி-வாலிபர் மர்ம சாவு
இது கொலை-தற்கொலையாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ஆந்திராவின் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள முனியால் என்ற கிராமத்தைச் சேர்ந்த செளம்யா ரெட்டி (23) சிகாகோவில் உள்ள தெற்கு இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் எலெக்ட்ரானிக்ஸ் படித்து வந்தார்.
இவரது உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகோகாவி்ன் ஸ்பானிஷ் ஏரிக் கரையில் ஒரு காரில் கிடந்தது. அவரை யாரோ சுட்டுக் கொன்றுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கார் செளம்யாவின் பெரியப்பா மகனான விக்ரம் குமார் ரெட்டி (27) என்பவருக்கு சொந்தமானது.
விக்ரமும் சுட்டுக் கொலை:
இந் நிலையில், செளம்யாவின் கொலை நடந்த 3 நாட்களில் சிகாகோவின் ஏரிக் கரையில் இருந்து விக்ரம் குமார் ரெட்டியின் உடல் இன்று குண்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
இவர் சிகாகோவில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரும் செளம்யாவும் மேரிவில்லே பகுதியில் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது கொலை-தற்கொலையாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 6 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 5 பேர் ஆந்திராவையும் ஒருவர் ஜார்க்கண்டையும் சேர்ந்தவர்கள் ஆவர்.



Click it and Unblock the Notifications
