'கிரீமி லேயர்' வரம்பு- பிரதமருடன் பாலு சந்திப்பு
டெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பை (கிரீமி லேயர்) உயர்த்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவிடம் பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார்.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஒதுக்கீட்டை 3 ஆண்டுகளில் படிப்படியாக அமலாக்கவும், இதனால் பொதுப்பிரிவினர் பாதிக்கப்படாத வகையில், கூடுதல் இடங்களை உருவாக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 9 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் தனது அறிக்கையை கடந்த ஜூலை 1ம் தேதி மத்திய அரசிடம் வழங்கியது.
அதில், உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு சலுகை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு (கிரீமி லேயர்) ஆண்டுக்கு ரூ.2.5 லட்சமாக உள்ளதை ரூ.4.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரையை உடனடியாக அமலாக்கி அதிக அளவிலான பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி நிலையங்களில் சேர வழி வகையை உருவாக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதினார்.
இந் நிலையில் மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டபடி, வருமான உச்சவரம்பை உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை இந்த மாதம் 29ம் தேதிக்குள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த ஒப்புதலைப் பெற்றால்தான், உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு 29ம் தேதி விசாரணைக்கு வரும்போது மத்திய அரசு உரிய பதிலை அளிக்க முடியும் என்பதை பாலு சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதற்காக, பாலுவிடம் பிரதமர் உறுதியளித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications