அவுட்சோர்சிங்.. பெரிய பாதிப்பில்லை-நாஸ்காம்
மும்பை: லேஹ்மன் பிரதர்ஸ் நிறுவன திவாலுக்குப் பின் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு இந்திய சாஃப்ட்வேர் சந்தையிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள பிபிஓக்கள் முழுமையாக அமெரிக்கா மற்றும் அதன் சார்பு நாடுகளைச் சார்ந்து இயங்குபவையே. இந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவு மற்றும் பெருமந்த நிலை காரணமாக இந்தியாவில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனங்கள் பல ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. பல பிபிஓக்களுக்கு வேலை இல்லாத நிலையும் தோன்றியுள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள நாஸ்காம் (இந்திய சாஃப்ட்வேர் வர்த்தகத்தின் தலைமை அமைப்பு), உலகமெங்கும் ஏற்பட்டுள் பொருளாதார பாதிப்பு இந்திய ஐடி துறையை பெருமளவு பாதித்திருப்பது உண்மைதான். மறுக்கவில்லை. மேலும் பிபிஓக்களுக்கு இது மிகவும் நெருக்கடியான காலம். ஆனால் இந்த நிலை தற்காலிகமானது என்றே தோன்றுகிறது.
நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த நிலை மேலும் தீவிரமடைந்தால், அதற்கான மாற்று வழிகள் குறித்தும் பேசி வருகிறோம்..., என நாஸ்காம் கூறியுள்ளது.
யாருக்கு பாதிப்பு?:
இந்த பெருமந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிறுவனங்கள் எவை என்ற விவரங்களும் இப்போது வெளி வரத் துவங்கியுள்ளன. நாட்டின் சாஃப்ட்வேர் வர்த்தகத்தில் முதல் இரு இடங்களை வகிக்கும் இன்போஸிஸ் மற்றும் டாடா கன்சஸ்டன்ஸி நிறுவனங்களுக்கு இதில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், இது குறித்து அவை கருத்து கூற மறுத்து வருகின்றன.
தனிப்பட்ட எந்த நிறுவனத்தின் வீழ்ச்சி குறித்தும் கருத்துகூற நாங்கள் விரும்பவில்லை என இவ்விரு நிறுவனங்களும் கூறிவிட்டன.
ஆனால் விப்ரோ நிறுவனம் தனது இழப்பை வெளிப்படையாக அறிவித்துள்ளது. லேஹ்மன் பிரதர்ஸூடன் வர்த்தகம் குறித்து நாங்கள் பேசி வந்தது உண்மைதான். ஆனால் அந்த இழப்பு எவ்வளவு, பாதிப்பு என்ன போன்ற விபரங்களை வெளியில் விவாதிக்க முடியாது, என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சத்யம் நிறுவனமும் இதே போலத்தான் கூறியுள்ளது. லேஹ்மன் பிரதர்ஸூடன் அவர்கள் வணிக உறவு வைத்திருந்தாலும், அவர்கள் மூலம் வந்த வருவாய் குறைந்த அளவுதான் என்றும், இதனால் தங்களுக்கு எந்த பாதிப்புமில்லை என்றும் கூறியுள்ளது.
லேஹ்மனும், மெர்ரில் லின்ஜ்சும் வீழ்ந்ததில் தங்களுக்கு எந்த பாதிப்புமில்லை என்றும், அவர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களும் இல்லை எனவும் மற்றொரு பெரிய நிறுவனமான எச்சிஎல் கூறியுள்ளது.
மேலும் பிபிஓ துறையில் கணிசமான வேலையிழப்புகள் தொடரும், சம்பள உயர்வும் இனி பெரிதாக இருக்காது என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பிபிஓ நிறுவனங்கள் பெரும் வருவாயைக் குவித்தன. ஆனால் நிச்சயம் இந்த ஆண்டு இதில் பாதியளவுக்குக் கூட வருவாய் இருக்குமா தெரியாது என பீதியைக் கிளப்புகின்றனர் இத்துறை வல்லுநர்கள்.
ஏற்கெனவே சாஃப்ட்வேர் துறையில் நீடித்த 29 சதவிகித வளர்ச்சி இந்த ஆண்டு 22 சதவிகிதமாக குறைந்துள்ளது. இப்போது பெருளாதார மந்தம் வேறு சேர்ந்து கொண்டதால் சில காலத்துக்கு கஷ்டம் தான்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications