வீரம் இல்லாத விவேகம்.. பயனில்லை: பாஜக
ராமநாதபுரம்: தமிழகத்தில் கையாலாகாத அரசு ஆட்சி நடத்தி வருகிறது என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
முக்கிய மாநிலங்களை குறிவைத்து தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதியில் இருந்து பிரதமர் வரை உயர் பதவிகளில் இருப்பவர்கள் வார்த்தை பிரயோகங்களை அறிக்கைகளாக வெளியிடுகிறார்களே தவிர வெடிகுண்டு நிகழ்வுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது துரதிர்ஷ்டம்.
பயங்கரவாதத்தை தடுக்க புதிய சட்டங்கள் தேவையில்லை என்ற மத்திய அரசின் முடிவு கோழைத்தனமானது. குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் ஓட்டு வங்கியை தக்கவைத்து கொள்ள வேண்டுமென்பதற்காக சட்டத்தை அமல்படுத்துவதில் பின்வாங்கியுள்ளனர்.
சத்திரியனாக இருப்பவன் அகிம்சையை பற்றி பேசக்கூடாது. தனது கடமையை கண்டிப்புடன் நிறைவேற்ற வேண்டும். வீரம் இல்லாத விவேகம் எந்த பலனையும் அளிக்காது என்பதை உயர் பதவியில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் பயங்கரவாதத்தை தடுப்பதற்கான புதிய சட்டங்கள் நிறைவேற்றப்படும்.
தமிழகத்தில் 6 மாதங்கள் வரை மின்வெட்டு நீடிக்கும் என்று மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இரண்டரை ஆண்டுகள் வரை மின் வெட்டு தொடரும் என்று அறிவித்துள்ளார்.
திமுகவின் ஆட்சிக் காலம் இன்னும் இரண்டரை ஆண்டுகள் என்பதால் அதை கணக்கிட்டு அவர் கூறியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. தமிழகத்தில் கையாலாகாத அரசு ஆட்சி செய்து வருவதால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எதற்கெடுத்தாலும் அண்டை மாநிலங்களை சுட்டிக்காட்டி அவர்களைவிட நமது நிலை மோசமில்லை என்று கூறிவரும் முதல்வர் கருணாநிதி சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஒரு சதவீத மின்வெட்டு கூட இருந்ததில்லை என்ற விளம்பர செய்தியை படித்திருப்பார் என நம்புகிறேன்.
அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி நடப்பதால் இதை சாதிக்க முடிந்துள்ளது. தமிழகத்திலும் இதுபோன்ற நிலை எங்கள் ஆட்சியில் கொண்டுவரப்படும்.
இஸ்லாமியர்களில் நல்லவர்கள், அமைதியை விரும்புபவர்கள் அதிக அளவில் உள்ளனர். ஆனால் தடைசெய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்கள் அதற்கு தடையாக இருப்பதோடு அவர்கள் கட்டுப்பாட்டில் இஸ்லாமியர்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலை மாறவேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே இருந்த நல்லுறவு சிலரால் துண்டிக்கப்பட்டு கலவரத்துக்கான விதைகள் தூவப்பட்டுள்ளன. இதை முளையிலேயே கிள்ளி எறிய போலீஸ் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் இல.கணேசன்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications