அணு ஒப்பந்தம்-பிரதமர் இன்று யு.எஸ் பயணம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் 10 நாள் பயணமாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இன்று புறப்படுகிறார்.
இந்தப் பயணத்தின்போது, முடிந்தால், அவர் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலும் கையெழுத்திடக் கூடும் என்று தெரிகிறது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.
இந்த ஒப்பந்தம் இப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அங்கு ஒப்புதல் கிடைத்தால் தான் பிரதமரும் அமெரிக்க அதிபர் புஷ்சும் அதில் கையெழுத்திட முடியும்.
இதனால் ஒப்பந்தந்துக்கு விரைவில் ஒப்புதல் பெற புஷ் அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளதால் இந்தப் பயணத்தின்போதே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு வாய்ப்புகள் குறைவே.
23ம் தேதி முதல் 27ம் தேதி அமெரிக்காவில் இருக்கும் பிரதமர் 26ம் தேதி ஐ.நாவின் 63 பொது சபைக் கூட்டத்தில் பேசுகிறார். இதில் பங்கேற்கும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, சீன பிரதமர் வென்ஜியாபோ உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார்.
28ம் தேதி பிரான்ஸ் புறப்படும் பிரதமர் 29ம் தேதி மார்ஷெல் நகரில் நடக்கும் இந்திய-ஐரோப்பிய யூனியன் கூட்டத்திலும், பின்னர் இந்திய-பிரான்ஸ் கூட்டுக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
அப்போது பிரான்சுடனும் தனியாக அணு ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து பிரஞ்சு அதிபர் நிக்கோலசுடன் பேச்சு நடத்துகிறார்.
இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு அக்டோபர் 1ம் தேதி பிரதமர் இந்தியா திரும்புகிறார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்?












Click it and Unblock the Notifications