நிதி நெருக்கடி-யு.எஸ். காங்கிரசில் பின்னுக்கு போன அணு ஒப்பந்தம்
வாஷிங்டன்: அமெரிக்காவை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் நிதிச் சந்தை நெருக்கடி குறித்து அமெரிக்க நாடாளுமன்றம் விரிவான விவாதம் நடத்தவுள்ளது. இதனால் இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் உடனடியாக ஒப்புதல் அளிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. எனவே புஷ் பதவிக்காலத்திற்குள் ஒப்பந்தம் கையெழுத்தாவது கேள்விக்குறியாகியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவின் மிகப் பெரிய டாபிக் ஆக இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்தான் இருந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்திலும் இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி அளிப்பது குறித்த விவாதம் சூடாக நடந்து வந்தது.
ஆனால் தற்போது நிலைமை அப்படியே மாறிப் போயுள்ளது. அமெரிக்க நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சரிவு, அந்த நாட்டை உலுக்கி எடுத்து வருகிறது. பல வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் திவால் நிலையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன.
இதையடுத்து இவற்றைக் காக்கவும், நிதி நிலை சீர்குலைவைத் தடுக்கவும் அமெரிக்க அரசு முழு வீச்சில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. நிலைமையை சமாளிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதமும் நடைபெறவுள்ளது.
இதனால் இந்தியா மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது. எனவே பிரதமர் மன்மோகன் சிங் தனது அமெரிக்க பயணத்தின்போது அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பு இல்ைல என்று கூறப்படுகிறது.
நாளை மறு நாள் புஷ்ஷை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் பிரதமர். அப்போது இருவரும் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதற்கான வாய்ப்புகள் சுத்தமாக குறைந்து போய் விட்டது.
புஷ் பதவிக்காலத்திற்குள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்பதும் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications