ரூ. 10,000 சம்பளம் வாங்கும் பொதுத்துறை ஊழியர்களுக்கும் போனஸ்: கருணாநிதி

இதுகுறித்து அவர் கூறுகையில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பொதுத் துறை சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் மாத வருமானமாக ரூ.10,000 பெற்று வருகின்றனர். இவர்களுக்கு போனஸ் கிடையாது என்பது தவறான தகவல். அரசு ஊழியர்களை போல இவர்களுக்கும் போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்படும்.
வருமான உச்ச வரம்பின் அடிப்படையில் போனஸ் வழங்கப்படும். பொதுத் துறை அல்லாத ஊழியர்களுக்கு தொழிற் சங்கங்கள் மூலம் போனஸ் நிர்ணயிக்கப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் விதிகளை தளர்த்தி, வருமான உச்சவரம்பின்றி கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை போல இந்தாண்டும் போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்படும்
கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டதை போல வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். அவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுத்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பண்டிகை காலத்தின்போது போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.
லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் போனஸ் சட்டப்படி அளிக்க வேண்டிய போனஸ் தொகையை 30.9.2008க்குள் அளித்தால்தான் தமது வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்யும்போது இச்செலவினத்தை சேர்க்க முடியும் என்று மத்திய அரசு வருமான வரிச் சட்டத்தைத் திருத்தியுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் 30.9.2008க்குள் போனஸ் சட்டப்படி ரூபாய் 10,000க்கு மிகாமல் மாத ஊதியம் பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் அளிக்க வேண்டிய போனஸ் தொகையை வழங்கலாம் என அரசு ஆணையிட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் முதல் நான்கு ஆண்டுகளில் போனஸ் மட்டுமே வழங்கப்பட்டது. 2005-06 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி அந்த ஆண்டில் மட்டும் கருணைத் தொகை வழங்கப்பட்டது.
இந்த அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு போனஸ் தொகை மற்றும் கருணைத் தொகை தவறாமல் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத் துறை பணியாளர்களின் நலன் காப்பதில் நமது நாட்டிற்கே முன்னோடியாகத் திகழும் இந்த அரசு, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் தொடர்ந்து வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications