யாருக்கு ஆதரவு?- லயோலா சர்வே: அதிமுக 38.3% - திமுக 25.8% - தேமுதிக 19.5%

சென்னை லயோலாக் கல்லூரியின் ஊடகவியல் துறை சார்பில் நடத்தப்படும் கருத்துக் கணிப்பு பிரபலமானது. அந்த வகையில் தற்போது பல்வேறு அரசியல் பிரச்சினைகள் நிலவி வரும் சூழ்நிலையில், புதிய கருத்துக் கணிப்பு ஒன்றை லயோலா கல்லூரி எடுத்து வெளியிட்டுள்ளது.
தேர்தலில் முக்கிய பிரச்சனை-மின்வெட்டு:
அதில் தமிழகத்தில் அடுத்த தேர்தலில் மின்வெட்டுதான் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு குறித்து தமிழக மக்கள் மிகப் பெரும் கோபத்துடன் உள்ளனர். கடும் அதிருப்தியில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 ரூபாய் அரிசிக்கு ஆதரவில்லை...:
தமிழக அரசின் ரூபாய்க்கு கிலோ அரிசித் திட்டத்திற்கு மக்களிடையே பெருமளவில் ஆதரவு இல்லை. 52 சதவீதம் பேர் இது தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். 22 சதவீதம் பேர் ஏழை மக்களுக்குப் பயன் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
எம்.பிக்கள் மீது கடும் அதிருப்தி:
தமிழகத்தில் தற்போது உள்ள எம்.பிக்கள் அனைவர் மீதும் மக்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். அவர்கள் மீண்டும் போட்டியிட்டால் வாக்களிக்க மாட்டோம் என 63 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல அரசுத் துறை அதிகாரிகள் மீது மிகக் கடும் கோபத்துடன் மக்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது. கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 87 சதவீதம் பேர் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் மிகவும் மோசம் என தெரிவித்துள்ளனர்.
இலவசத் திட்டங்களுக்கு வரவேற்பு:
தமிழக அரசு அறிவித்துள்ள இலவசத் திட்டங்களுக்கு பெருவாரியான ஆதரவு காணப்படுகிறது. 84 சதவீதம் பேர் இலவசத் திட்டங்களை வரவேற்றுள்ளனர்.
எம்.பி. தொகுதி நிதி படு மோசமாக பயன்படுத்தப்படுவதாக 83 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிமுகவுக்கு 38.3 சதவீதம் ஆதரவு:
இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 38.3 சதவீதம் பேர் அதிமுகவுக்கு என்றும், 25.8 சதவீதம் பேர் திமுகவுக்கு என்றும், 19.5சதவீதம் பேர் தேமுதிகவுக்கு என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேமுதிக பலமடைகிறது:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என 43.4 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஓரிரு இடங்களில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும் என 32.8 சதவீதம் பேரும், தாக்கமே இருக்காது என 23.8 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சரத்குமார் வேஸ்ட்:
சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஓரிரு இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என 14.8 சதவீதம் பேர் கூறியுள்ளனர். மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தும் என 2.5 சதவீதம் பேர் மட்டும் கூறியுள்ளனர். எந்தத் தாக்கமும் இருக்காது என 82.7 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
டி.ஆர், கார்த்திக்.. ஐயோ.. ஐயோ:
விஜய டி.ராஜேந்தின் லட்சிய திமுகவால் எந்த தாக்கமும் இருக்காது என 94.7 சதவீதம் பேரும், கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியால் எந்த தாக்கமும் இருக்காது என 96.2 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications