அரசு மருத்துவமனைக்கு நிதி-அதிமுக ஆர்பாட்டம்
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த நிதி ஒதுக்காததை கண்டித்தும், கூடுதல் மின் வெட்டை கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று மணப்பாறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மணப்பாறை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட ஆணை என்ற ஒரே காரணத்திற்காக, மணப்பாறை அரசு மருத்துவமனையை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தும் திட்டத்திற்கு திமுக அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை.
இது போன்ற அவசியமான சுகாதாரத் திட்டத்திற்காக அரசியல் சாயம் பூசும் அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டு என ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் மின்வெட்டு இருப்பதாக திருச்சி மாவட்ட மக்கள் மற்றும் வணிகர்கள் புகார் கூறுகின்றனர். இதை கண்டித்து இன்று மணப்பாறை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இந்த கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று மணப்பாறை அரசு பொது மருத்துவமனை முன்பு அதிமுக தலைமை நிலையச் செயலாளர் செங்கோட்டையன் தலைமையில், மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணின் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications