டெல்லி குண்டுவெடிப்பு பலி 3 ஆக உயர்வு: 2 பேர் கைது

டெல்லி மெஹ்ராலி பூக்கடை பகுதியில் நேற்று பிற்பகல் குண்டுவெடித்தது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீசி விட்டுச் ெசன்ற டிபன் பாக்ஸில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த குண்டை எடுத்த சிறுவன் உள்ளிட்ட 2 பேர் நேற்று உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில், காயமடைந்தவர்களில் ஒருவர் இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது அடையாளம் ெதரியவில்லை.
உதவப் போய் உயிரிழந்த சிறுவன்:
நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு மின்னணுப் பொருள் விற்பனைக் கடைக்கு 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் ஒரு பாலிதீன் பையை அங்கு வைத்து விட்டுச் சென்றனர்.
இதைப் பார்த்த 12 வயது சிறுவன் சந்தோஷ்குமார், அவர்கள் தவற விட்டு விட்டார்களோ என நினைத்து அதை எடுத்துக் கொடுக்க முயன்றான். அப்போது குண்டு வெடித்தது.
இதில் சம்பவ இடத்திலேயே அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். நேற்று இரவு 60 வயது முதியவர் உயிரிழந்தார்.
2 பேர் கைது:
இந்த நிலையில், குண்டுவெடிப்பு தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் உ.பி. மாநிலம் அலிகாரைச் சேர்ந்த நானக்சந்த். இவர் குண்டுவெடிப்பு நடந்ததும், அதுகுறித்து செல்போன் மூலம் பத்திரிக்கை நிறுவனங்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். இன்னொருவர் நானக் சந்த்துக்கு சிம் கார்டை விற்றவர். இவர்களுக்கு குண்டுவெடிப்பு குறித்த தகவல் முன்கூட்டியே தெரியும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
பைக் நபர்களைப் பிடிக்க வலை:
இதற்கிடையே, மோட்டார் சைக்கிளில் வந்து குண்டை வைத்து விட்டுச் சென்ற இரு நபர்களையும் போலீஸார் பிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இருவரும் வாலிபர்கள் என தெரிகிறது. இருவரும் ஹெல்மட் போட்டிருந்ததால் அவர்களின் முகம் யாருக்கும் சரிவரத் தெரியவில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications