ஷேவாக்குடன் மோதல் - முனாப் படேலுக்கு அபராதம்
டெல்லி: இராணி கோப்பை போட்டியின்போது ஷேவாக்கோடு மோதலில் ஈடுபட்ட முனாப் படேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் அவருக்கு வழங்கப்படும் தொகையில் 70 சதவீதத்தை அபராதமாக கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
ரெஸ்ட் ஆப் இந்தியா மற்றும் ரஞ்சிக் கோப்பை சாம்பியன் டெல்லி மோதிய இராணிக் கோப்பை போட்டி பரோடாவில் நடைபெற்றது. இதில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது ரெஸ்ட் ஆப் இந்தியா பந்து வீச்சாளர் முனாப் படேல் மற்றும் டெல்லி ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
அப்போது டெல்லி கேப்டன் ஷேவாக் குறுக்கிட்டு சமரசம் செய்ய முயன்றார். உடனே முனாப் படேல், ஷேவாக்கோடு வாக்குவாதம் செய்தார். இது தொடர்பாக ஷேவாக், முனாப் படேல் மீது புகார் செய்தார். இருப்பினும் நடவடிக்ைக தாமதமானதால் கோபித்துக் கொண்டு பாதியிலேயே ஆட்டத்ைத விட்டு வெளியேறிய ஷேவாக் டெல்லி திரும்பி விட்டார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர், முனாப் படேலுக்கு அபராதம் விதித்துள்ளார். இந்த போட்டிக்கு அவருக்கு பெறும் சம்பளத்தில் இருந்து 70 சதவீதம் அபராதமாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications