மகனின் உறுப்புகள் தானம்: டாக்டர் தம்பதிக்கு குவியும் பாராட்டு
காஞ்சிபுரம்: மகன் ஹிதேந்திரனின் இதயம் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்து மனிதர்களுல் மாணிக்கமாக உயர்ந்திருக்கும் காஞ்சிபுரம் டாக்டர் அசோகன் தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. மத்திய அமைச்சர்கள் டாக்டர் அன்புமணி, ஜி.கே.வாசன் ஆகியோர் நேரில் சென்று அசோகன் தம்பதியைப் பாராட்டினர்.
திருக்கழுக்குன்றத்தைச் ேசர்ந்த டாக்டர் அசோகன் தம்பதியின் மகன் ஹிதேந்தின். 16 வயதான ஹிதேந்திரன் சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தான். இதையடுத்து அவனது இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அசோகன் தம்பதியினர் தானம் செய்தனர்.
ஹிதேந்திரனின் இதயம், அபிராமி என்கிற சிறுமிக்கு பொருத்தப்பட்டு அந்த சிறுமிக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது.
இதையடுத்து அபிராமியின் பெற்றோர் நேற்று ஹிதேந்திரன் வீட்டுக்குச் சென்று அவனது படத்தைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர் அசோகன் தம்பதியின் முன்பு அமர்ந்து கண்ணீர் விட்டுக் கதறி அழுது அவர்களின் தானத்தால் தங்களது மகளுக்கு மறு வாழ்வு கிடைத்துள்ளது என்று கூறி நன்றி தெரிவித்தனர்.
அபிராமியின் பெற்றோரும், ஹிதேந்திரனின் பெற்றோரும் பரஸ்பரம் ஆறுதல் கூறிக் கொண்டது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
அமைச்சர்கள் சந்திப்பு
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஹிதேந்திரன் வீட்டுக்குச் சென்று அவனது படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அசோகன் தம்பதிக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அதேபோல மத்திய புள்ளியியல் துறைஇணை அமைச்சர் ஜி.கே.வாசனும் ஹிதேந்திரன் வீட்டுக்குச் சென்று அசோகன் தம்பதிக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹிதேந்திரனும், அவனது உடல் உறுப்புகளை தானம் செய்து மனிதாபிமானத்தை நிலை நிறுத்திய அசோகன் தம்பதியினரும் காலம் காலமாக நினைவு கூறப்படுவார்கள்.
அசோகன் தம்பதியினரின் செயலை நான் வெகுவாக பாராட்டினேன் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications