கோவில் உரிமை பிரச்சனை-6 சமுதாய மக்கள் உண்ணாவிரதம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் வழிபாடு நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட உரிமை பிரச்சனையால், 6 சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகில் உள்ளது காக்கிவாடன்பட்டியில் காளியம்மன் மற்றும் கண்ணன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் வழிபாடு நடத்துவது தொடர்பாக 6 சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கும், இன்னொரு சமூகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
கோவிலின் உரிமை குறி்த்த பிரச்சனையால் கோவில்கள் பூட்டப்பட்டன. இந்த கோவில்களில் வழிபாடு நடத்த உரிமை கோரி 6 சமுதாய மக்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு அருகே உள்ள காமாட்சியம்மன் கோவிலில் கடந்த 25ம் தேதி குடியேறினர்.
சமரசம் செய்ய வந்த தாசில்தார், அவர்களுக்காக காத்திருந்தார். அப்போது கோவில்கள் திறக்கப்பட்டன. ஆனால் அவர்கள் வராததால் தாசில்தார் சென்றுவிட்டார்.
இந்த பிரச்சனையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் இரு தரப்பையும் அழைத்துப் பேச வேண்டும் என்று போராட்டகாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கை ஏற்கப்படாதாதல் 6 சமுதாயத்தை சேர்ந்த மக்கள் நேற்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications