மகளை எழுத்தராக்க முயன்ற திமுக பஞ். தலைவரின் முயற்சி தோல்வி
சென்னை: சென்னை அருகே திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் தனது மகளை ஊராட்சி அலுவலக எழுத்தராக நியமிக்க முயன்றார். ஆனால் ஊராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது முயற்சி பலிக்கவில்லை.
சென்னை, மேடவாக்கம் அருகே உள்ளது ஒட்டியம்பாக்கம் ஊராட்சி. இதன் தலைவராக இருப்பவர் சடையப்பன். இவர் திமுகவைச் சேர்ந்தவராவார். இவரது மகள் சுதா.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில், எழுத்தர் பணி காலியாக உள்ளது. இதில் சேர 4 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் பட்டதாரியான தனது மகள் சுதாவை அப்பொறுப்பில் நியமிக்க முடிவு செய்தார் சடையப்பன்.
இதையடுத்து நேற்று மன்றக் கூட்டத்தை அவர் கூட்டினார். அதில் சுதாவை எழுத்தராக நியமிக்க தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு துணைத் தலைவரான திமுகவைச் சேர்ந்த ராஜாராமன் மற்றும் கவுன்சிலர்கள் ஏழுமலை, சுந்தரராஜன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்னர்.
இது அரசு விதிமுறைகளை மீறும் செயல், ஏற்க முடியாது என்று அவர்கள் கூறினர். ஆனாலும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருந்தார் சடையப்பன். இதையடுத்து 3 பேரும் உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சர்ச்சையை வளர்க்க விரும்பாமல் மகளை எழுத்தர் பதவியில் நியமிக்கும் தீர்மானத்தை கைவிட்டு விட்டு கிளம்பிச் சென்றார் சடையப்பன்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications