ராமேஸ்வரம் மீனவர்களிடம் இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் மீண்டும் அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதல், ஈழத் தமிழர்கள் மீது நடந்து வருவதைப் போல தொடர் கதையாகி விட்டது. தமிழர்கள் என்று யாரைப் பார்த்தாலும் இனி இலங்கை கடற்படை சுட்டுத் தள்ளும் நிலை உருவாகி வருகிறது.
சமீபத்தில், கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் மதுரை மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு அடாவடித் தாக்குதலை இலங்கை கடற்படை நடத்தியுள்ளது.
நேற்று முன்தினம் 504 படகுகளில் மீன்வர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர்.
தமிழக மீனவர்களை துப்பாக்கிகளை காட்டி செல்லுமாறு எச்சரித்தனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் வலைகளை எடுத்துக் கொண்டு வேகமாக கிளம்பினர். அப்போது சில கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்களின் படகுகளை மறித்து வலைகளை அறுத்து எறிந்தனர். பின்னர் மீன்களைப் பறிமுதல் செய்தனர். மீன்பிடி சாதனங்களையும் எடுத்துக் கொண்டு தமிழக மீனவர்களை விரட்டி விட்டனர்.
இந்த சம்பவத்தால் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பதட்டம் நிலவுகிறது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications