சூர்யா அறிமுகப்படுத்திய 'காப்ஸ்யூல் எண்டோஸ்கோபி'
சென்னை: அறுவைச் சிகிச்சையில் மிகப் பெரிய புரட்சியைத் தோற்றுவித்தது காப்ஸ்யூல் எண்டோஸ்கோபியின் கண்டுபிடிப்பு.
நோய்க்கு சிகிச்சை தர முதலில் அந்த நோயைக் கண்டுபிடிப்பது முக்கியம்.
நமது உணவு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள கோளாறைச் சரிசெய்ய முன்பெல்லாம் ஸ்டீல் குழாய் வழியாக உபகரணங்களை அனுப்பி சோதித்து பின் அறுவைச் சிகிச்சை செய்வார்கள்.
ஆனால் இப்போது மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. ஒரு சிறிய மாத்திரை வடிவில் கேமராவைப் பொருத்தி உணவு மண்டலத்துக்குள் அனுப்புகிறார்கள். எங்கு நோய் பாதிப்பு உள்ளது என்பதை இந்த கேமரா கண்டுபிடித்துவிடும். அடுத்த எட்டு மணி நேரத்தில் 50,000 படங்களை எடுத்துத் தள்ளும இந்தக் கேமராவின் மூலம் நோயைக் கண்டறிவது சுலபம். சிகிச்சையை வேகமாகத் தொடங்கவும் இது உதவும்.
2002ம் ஆண்டே இந்த வகை நோயறியும் கருவியை சென்னையின் பிரபல மருத்துவர் டாக்டர் மோகன் பிரசாத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார்.
இப்போது அதன் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்துள்ளார். சென்னையில் சமீபத்தில் இக்கருவியை முறைப்படி அறிமுகப்படுத்தினார் நடிகர் சூர்யா.
இந்தக் கருவி உண்மையிலேயே உலக மக்களை நோயிலிருந்து காக்கும் பெரிய விஷயம். இங்கே எத்தனையோ பேர் தங்களுக்கு வந்துள்ள நோய் என்ன என்று தெரியாமலேயே இறந்துவிடுகிறார்கள். இந்த சூழலில் இக்கருவி மிகவும் அவசியம் என்றார் சூர்யா.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications