இந்திய முதலீடுகள்: திரும்ப வாங்கும் சர்வதேச நிதி அமைப்புகள்!

குறிப்பாக உள்கட்டமைப்புத் துறை நிறுவனங்களில் உள்ள தங்களது பங்குகளை உடனடியாக விற்று வருகின்றன. இந்தியாவின் முதலீட்டுத் துறையில் இது ஒரு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்தியப் பங்குச் சந்தை வரலாறு காணாத சரிவைச் சந்திக்க ஆரம்பித்திருப்பதன் பின்னணி இதுதான்.
மேற்கண்ட ஐந்து வங்கிகளும் சர்வதேச அளவில் பல துறைகளில் முதலீடு செய்துள்ளன. பல்வேறு நிறுவனங்களில் பஙகுகளை வாங்கியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, பெரும்பாலும் உள்கட்டமைப்புத் துறையில்தான் இந்த வங்கிகளின் பெரும் தொகையை பங்குகளாக முதலீடு செய்திருந்தன.
சமீபத்தில் திவால் நோட்டீஸ் கொடுத்து விட்ட லேஹ்மன் பிரதர்ஸ் நிறுவனம், ஐதராபாதைச் சேர்ந்த கே.எஸ்.கே எனர்ஜி., கே.பி.ஐ.டி கம்மின்ஸ், கிரேன்ஸ் சாப்ட்வேர் மற்றும் பெட்டர்ஸ் லாயிட் நிறுவனங்களில்தான் பெருமளவு முதலீடு செய்திருந்தது. அதே போல விப்ரோ போன்ற பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களிலும் முதலீடு செய்திருந்தனர்.
இப்போது லேஹ்மன் பிரதர்ஸ் திவாலாகி விட்டதால், அனைத்து முதலீடுகளையும் திரும்பப் பெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால் இந்தச் செய்தி வெளியில் பரவினால் பெரும் சரிவு தங்களுக்குத்தான் என்பதை உணர்ந்து பல நிறுவனங்கள் அதுகுறித்து வாய் திறக்காமல் உள்ளன. விப்ரோ, டிசிஎஸ் கூட, லேஹ்மன் பிரதர்ஸ் வீழ்ச்சி தங்களைப் பாதிக்கவில்லை என அறிவித்திருந்தன.
அதேபோல எஸ் குமார்ஸ் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளரான மார்கன் ஸ்டேன்லி, முதலீட்டு வங்கி என்ற நிலையிலிருந்து சாதாரண வங்கியாக மாற உள்ளது. எனவே தற்போது எஸ் குமார்ஸில் முதலீடு செய்துள்ள தொகையை முழுவதுமாகவே திரும்பப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த நிறுவனத்தில் தனக்குள்ள 1.31 கோடி பங்குளை ஏற்கெனவே விற்றுவிட்டது. இன்னும் பாக்கியுள்ள 80 லட்சம் பங்குகளையும் விற்கும் முயற்சியில் உள்ளது. லட்சமி எனர்ஜி மற்றும் புட்ஸ் நிறுவனத்தில் உள்ள தனது 2 சதவிகித பங்குகளையும் விற்கப் போகிறு இந்நிறுவனம்.
சிட்டி குரூப்பும் தங்களது முதலீடுகளை திரும்பப் பெற்று வருகிறது. ருச்சி சோயாவில் தான் முதலீடு செய்த 19 லட்சம் பங்குகளை சமீபத்தில் விற்றது இந்நிறுவனம்.
பினாக்கிள் பயோடெக்கிலிருந்த தனது பங்குகளில் 18 லட்சம் எண்ணிக்கையிலான பங்குகளை விற்றுள்ளது மெர்ரில் லின்ஜ். பிற நிறுவனங்களில் உள்ள தனது பங்குகளையும் விற்கப் போகிறது இந்த வங்கி.
இந்த நிலை மேலும் தொடர்ந்தால் அது இந்தியப் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கும் என அஞ்சுகின்றனர் நிபுணர்கள்.
வரும் காலம் சோதனைக் காலம்தான்!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications