சிறையில் காதலியை மணந்தார் சார்லஸ் சோப்ராஜ்?
காத்மாண்டு: நேபாள நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சர்வதேச கடத்தல்காரன் சார்லஸ் சோப்ராஜ், காதலி நிகிதாவை சிறையில் வைத்து மணந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல கடத்தல்காரன் சார்லஸ் சோப்ராஜ். பல நாட்டு கோர்ட்டுகளில் இவர் மீது வழக்குகள் உள்ளன. தற்போது நேபாள நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2003ம் ஆண்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது நடந்த வழக்கின்போது சோப்ராஜுக்கு உதவுவதற்காக நேபாளத்தைச் சேர்ந்த நிகிதா பிஸ்வாஸ் என்ற பெண் மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
வழக்கு தொடர்பாக நிகிதா அடிக்கடி சோப்ராஜை சந்திக்க சிறைக்கு வருவார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு காத்மாண்டு மத்திய சிறையில் நிகிதாவும், சோப்ராஜும் கல்யாணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் நிகிதாவின் தாயார் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த கல்யாணச் செய்தியை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. சோப்ராஜை நிகிதா வந்து சந்தித்தார், அவ்வளவுதான் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications