மாணவன் மீது தாக்குதல்: தனியார் பள்ளி முதல்வர் மீது புகார்!
தூத்துக்குடி: தன் பள்ளியில் படித்த மாணவரைத் தாக்கியதாக அப்பள்ளியின் முதல்வர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ராஜீவ் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் முருகபூபதி. இவர் பேப்பர் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கீதா குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் முகேஷ் கோகுல். தூத்துக்குடி மில்லர் புரத்தில் உள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் பள்ளியில் தினமும் காலையில் பிரார்த்தனை நேரம் முடிந்ததும் மாணவர் ஒருவர் செய்தி தாளைப் படித்து அதிலுள்ள முக்கியச் செய்திகளைச் சொல்வது வழக்கம்.
நேற்று காலை மாணவர் முகேஷ் கோகுல் செய்தி தாளை படித்து சரியாக சொல்லவில்லையாம். அதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி முதல்வர் பிரைட் மாணவரை அடித்து உதைத்தாகத் தெரிகிறது.
அன்று மாலை வீடு திரும்பிய முகேஷ் கோகுல், இரவு வேலை முடிந்து தாய் வீட்டிற்கு வந்தபின் பள்ளியில் முதல்வர் தன்னை தாக்கி அவமானப்படுத்தியது பற்றி கூறி அழுதுள்ளார்.
உடல் முழுவதும் ஊமைக் காயங்கள் இருந்ததால் முகேஷ் கோகுல் தூத்துக்குடி அரசு மருத்துமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications