என் பெயரில் கட்சி துவங்கினால் நடவடிக்கை:ரஜினி
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
ஆனால் அதுகுறித்து இதுவரை இறுதியான, தெளிவான முடிவு எதையும் ரஜினிகாந்த் அறிவிக்கவில்லை. ஒவ்வொரு முறையும், ஆண்டவன் இடுகிற கட்டளையை நிறைவேற்றுவேன் எனப் பூடகமாக பதில் கூறிவந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ரிலீசான அவரது குசேலன் திரைப்படத்தில், அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கில்லை என்பதுபோல வசனம் வைத்திருந்தார். இதை அவரது ரசிகர்களும் ரசிக்கவில்லை, படமும் ஓடவில்லை.
உடனடியாக அந்த அரசியல் வசனங்களை படத்திலிருந்தே நீக்க உத்தரவிட்டு, தன் அரசியல் பிரவேசத்துக்கான முற்றுப் புள்ளியை கமாவாக்கினார் ரஜினி.
இந்த சூழலில் ரஜினி தனிக் கட்சி அல்லது மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப் போவதாக அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக கடந்த இரு மாதங்களாக அவரது ரசிகர்கள் ரஜினியை நேரில் சந்தித்து இது குறித்துப் பேசவும் முடிவு செய்து ஆங்காங்கே கூட்டங்கள் நடத்தி வந்தனர்.
தனிக் கட்சி:
ஒருகட்டத்தில் நிலைமை கை மீறியது. கோவையைச் சேர்ந்த அவரது ரசிகர்கள், ரஜினியைத் தலைவராக வைத்து தேசிய திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியும் அதற்கென புதிய கொடி ஒன்றையும் அறிமுகப்படுத்தினர்.
இது ரசிகர் மன்றத் தலைமைக்கு விரோதமானது என அவர்களுக்கு உடனே நோட்டீசு அனுப்பிய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா, ரஜினியின் உத்தரவுப்படி இப்போது அவர்களை மன்றத்திலிருந்தே நீக்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் கூடிய ரஜியின் ரசிகர்கள் சிலர், ரஜினி உடனே அரசியலுக்கு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
கோவாவில் எந்திரன் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இன்று காலை சென்னை திரும்பிய ரஜினிகாந்துக்கு அனைத்து விபரங்களும் தெரிவிக்கப்பட்டன.
உடனடியாக அவர் தனது செயலாளர் சத்தியநாராயணா மூலம் இன்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:
அண்டை மாநிலங்களில் சக நடிகர்கள் சிலர் கட்சி ஆரம்பித்திருப்பதும், அதன் விளைவாக என் ரசிகர்களுக்கும் அம்மாதிரி ஆசைகள் எழுவதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
இப்போது அரசியலில் ஈடுபடும் ஆசையுள்ளவர்கள் அவரவருக்கு விருப்பமான கட்சிகளில் சேர்ந்து பணியாற்றுங்கள்.
அதை விடுத்து, என் பெயரில் கட்சி ஆரம்பிப்பதோ, என் உருவப் படத்தை அதில் பயன்படுத்துவதோ தவறு. இதை மீறினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியலுக்கு வருமாறு என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அதேநேரம், நான் அரசியலுக்கு வர முடிவு செய்தால் அதை யாரும் தடுக்கவும் முடியாது என்று ரஜினி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!













Click it and Unblock the Notifications