ரஜினி அரசியல்: அவரும்தான் வரட்டுமே!
திருவண்ணாமலை: ரஜினி அரசியலுக்கு வருவதும் வராததும் அவர் விருப்பம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவரும்தான் வரட்டுமே என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈழத் தமிழர் பிரச்சனை ஒரு பொதுப் பிரச்சனை. இதில் அரசியல் ஆதாயம் பார்க்கக் கூடாது. அதனால்தான் இந்த கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்கிறோம். மனித நேயத்துடன் முதல்வர் கருணாநிதி கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக, மதிமுகவும் கலந்து கொள்ள வேண்டும்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம். கூட்டணி குறித்து தேர்தலின்போது முடிவு செய்து அறிவிக்கப்படும்.
ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்தியா ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம். அதன் மூலம் மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறோம் என்பதுதான் முக்கியம். அவரும்தான் களத்துக்கு வரட்டுமே!
ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான புகார்களுக்கு அமைச்சர் ராஜா பதிலளிக்க வேண்டும். தவறினால் அவர் மீது பிரதமர் மன்மோகன்சிங் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த முடிவு சரியானதே.
எங்கள் கட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன். மக்களை சந்தி்த்து அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிவேன்.
தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டு அனைத்துத் தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. இந்த மின்வெட்டால் வரும் தேர்தலில் திமுக தோல்வியை சந்திக்கும். தமிழக அரசு முதலில் மக்களுக்கு வழங்கும் இலவசத்தை நிறுத்த வேண்டும். இலவசமாக டிவியை வழங்கிவிட்டு மின்வெட்டு செய்தால் அவர்கள் எப்படி டிவி பார்ப்பார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications