சோமாலியா கடல் கொள்ளையர்கள்-சமாளிக்க இந்திய போர் கப்பல்
டெல்லி: சோமாலியாவில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு போர்க் கப்பலை அனுப்பவுள்ளது.
சோமாலியாவின் ஏடன் வளைகுடா பகுதியில் கடல் கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் நூற்றுக்கணக்கான சரக்கு, பயணிகள் கப்பல்களை அவர்கள் கடத்தியுள்ளனர்.
பல்வேறு நாடுகளும் பணம் தந்தே கப்பல்களையும் பயணிகளையும் ஊழியர்களையும் மீட்டுள்ளன.
இந் நிலையில் ஹாங்காங்கின் ஸ்டோட் வலோர் என்ற கெமிக்கல் டாங்கர் கப்பல் கடந்த மாதம் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்த கப்பலின் கேப்டன் பிரபாத் கோயல் உள்ளிட்ட இந்திய குழுவினரும் கொள்ளையர்களின் பிடியில் உள்ளனர்.
தனது கணவரையும் இந்திய கப்பல் ஊழியர்களையும் மீட்டுத் தரும்படி கேப்டன் பிரபாத் கோயலின் மனைவி சீமா கோயல் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து சோமாலியாவின் ஏடன் வளைகுடா பகுதிக்கு போர் கப்பல் அனுப்பப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த போர் கப்பலில் ஹெலிகாப்டர், கமாண்டோ படையினர் இருப்பர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கடத்திய கப்பலில் இருந்த 3 இந்தியர்களை கடல் கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications