மழை பெய்தாலும் நாளை மாநாடு-விஜயகாந்த்
சென்னை: தொடர்ந்து மழை பெய்தாலும் சென்னையில் நாளை (சனிக்கிழமை) தேமுதிக இளைஞரணி மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் என அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் 18ம் தேதி நடக்கும் இளைஞர் அணி மாநாடு புதியதோர் சமுதாயம் காண தமிழ்நாட்டில் ஒரு திருப்புமுனையை உருவாக்கும்.
நான் தெரிவித்தபடி மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
எனினும் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு போக்குவரத்துதுறை அனுமதி தர மறுக்கிறது. வாகன உரிமையாளர்கள் தாங்கள் வாங்கிய முன் பணத்தை ஆளும் கட்சியினரின் தூண்டுதலால் திரும்ப தருகின்றனர் என்று கேள்விப்படுகிறேன்.
வண்ண விளக்குகள் அமைத்தால் அவற்றிற்கான மின்சாரத்தை துண்டித்து விடுகின்றனர். நம்முடைய விளம்பர போர்டுகள் சேதப்படுத்தப்படுகின்றன.
போலீஸ் துறை மூலமும் தொந்தரவு தருவார்கள். இத்தகைய தடைகளை நீங்கள் சந்தித்தாலும் அவற்றை எல்லாம் மீறி மாநாட்டிற்கு வெள்ளம் போல் வந்து சேருவீர்கள் என்பது மாற்றாருக்கும் தெரியும்.
செயற்கை தடைகள் ஒரு புறமிருக்க, வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே வந்து மாநாட்டிற்கு இடையூறு ஏற்படுத்துமோ என்று நல்ல உள்ளம் படைத்த நாட்டு மக்கள் அஞ்சுகின்றனர்.
ஆனால், எந்தத் தடையையும் சந்தித்து வெற்றி கொள்ளும் ஆற்றல் நம் தொண்டர்களுக்கு உண்டு. குறிப்பாக புதுக்கோட்டையில் பெய்யாத மழையா?. கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெளியிலும் கூடி நிற்கும் ஆற்றல் உள்ளவர்கள் நீங்கள்.
ஆகவே சென்னையில் நடைபெறவுள்ள இளைஞர் அணி மாநாடு, மழை பெய்வதால் மட்டுமல்ல எக்காரணத்தைக் கொண்டும் தள்ளி வைக்கப்பட மாட்டாது. யாரேனும் அத்தகைய வதந்திகளை பரப்பினால் அதை நம்பாமல் மாநாட்டிற்கு வருக, வருக என அழைக்கிறேன்.
நம்முடைய மாநாடுகளின் சாதனைகளை கடந்த காலத்தில் நாமே தான் முறியடித்திருக்கிறோமே தவிர, வேறு எந்த அரசியல் இயக்கமும் அல்ல. அதுபோல, இந்த மாநாடு இதற்கு முந்தைய எல்லா மாநாடுகளையும் முறியடித்து புதிய சரித்திரம் படைக்க வேண்டும். உங்கள் அனைவரையும் காண நான் ஆவலோடு உள்ளேன்.
ஒன்று கூடுவோம், வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications