தமிழர் படுகொலை: 800 அகதிகள் உண்ணாவிரதம்
நெல்லை: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தாழையூத்தில் நேற்று 800 அகதிகள் உண்ணாவிரதம் இருந்தனர். போரில் இறந்த அப்பாவி மக்களுக்காக குத்துவிளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் பாளை பெருமாள்புரம், தாழையூத்து நாராணம்மாள்புரம், கோபாலசமுத்திரம், தென்காசி, வள்ளியூர், சமூகரெங்கபுரம், அம்பை, செட்டிமேடு, மற்றும் சங்கரன்கோவிலில் இரண்டு என்று மொத்தம் 8 அகதிகள் முகாம்கள் உள்ளன.
இங்கு 6,000க்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியுள்ளனர். இதில் தாழையூத்து அருகே உள்ள நாராணம்மாள்புரத்தில் 202 குடும்பங்களை சேர்ந்த 800 அகதிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன், சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை கண்டித்தும், தமிழக அரசு, மத்திய அரசு இதில் தலையிட்டு காப்பாற்ற கோரியும், ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
அகதிகள் முகாம் நுழைவு வாசலில் பந்தல் அமைத்து முகாம் தலைவர் கனகலிங்கம், உப தலைவர் தியாகராஜன், முன்னாள் தலைவர் ராமலிங்கம், ஆகியோர் தலைமையில் குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அப்போது பெண்கள் குழந்தைகள் குத்து விளக்கேற்றி இலங்கை போரில் இறந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications