ரேஷன் கடைகளில் பாமாயில் விலை குறைப்பு
சென்னை: ஏழைகளின் நிதிச் சுமையை மேலும் குறைக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் பாமாயில் எண்ணெய் விலையை 5 ரூபாய் குறைத்து தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இனிமேல் ரேஷன் கடைகளில் பாமாயில் ஒரு லிட்டர் ரூ. 35க்கு (முன்பு ரூ. 40) விற்கப்படும்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் லிட்டர் ரூ. 40 என்பதற்குப் பதில் ரூ. 35க்கு விற்கப்படும். ரூ. 5 விலை குறைக்கப்புகிறது.
சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல்வேறு சமையல் பொருட்கள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்கப்பட்டு வருகிறது. முதலில் முதல்வர் கருணாநிதி கிலோ அரிசி ரூ. 2 என்ற புரட்சிகர திட்டத்தை அமல்படுத்தினார். பின்னர் இது ரூ. 1 ஆக குறைக்கப்பட்டது.
பொதுமக்களின் நிதிச் சுமையை மேலும் குறைக்கும் வகையில், மானிய விலையில் மளிகைப் பொருள்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ரூ. 62 மதிப்புள்ள பொருட்கள் இத்திட்டத்தின் கீழ் ரூ. 50க்கு மக்களுக்கு வழங்கப்படுகிறது. அக்டோபர் 2ம் தேதி இந்தத் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
தற்போது அந்தத் திட்டத்தின் கீழ் பாமாயில் விலையை ரூ. 40 என்பதிலிருந்து ரூ. 35 ஆக குறைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறுகையில், மானிய விலையில் மளிகைத் திட்டத்தின் கீழ் மேலும் சில பொருட்களை சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தினசரி 1.5 லட்சம் மளிகைப் பொருள் பாக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.
இந்தப் பொருட்களை தற்போது இரண்டு முன்னணி நிறுவனங்களிடமிருந்து அரசு பெற்று, அரசு கிட்டங்கிகளில் இருப்பு வைத்து பாக்கெட் போட்டு ரேஷன் கடைகள் மூலம் விற்று வருகிறது.
ஆனால் இதனால் போக்குவரத்து செலவும், தாமதமும் ஏற்படுகிறது. எனவே இந்த பணியில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை இதில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கண்காணிப்பின் கீழ் இவர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவர்.
ரூபாய்க்கு 2 கிலோ அரிசி என்ற திட்டம் ஒரு ரூபாய் என்று விலை குறைக்கப்பட்ட பின்னரும் கூட அதே தரத்திலான அரிசியே விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றார் வேலு.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications