சென்னை-2 விமானங்கள் மோதல் தவிர்ப்பு

நேற்றிரவு இந்தச் சம்பவம் நடந்தது.
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் பாரமவுண்ட் ஏர்வேஸ் விமானம் 49 பயணிகளுடன் டேக்-ஆப் செய்ய ரன்வேயில் ஓட ஆரம்பித்தது.
இந் நிலையில் அந்த ரன்-வேக்கு பக்கத்தில் இருந்த பிரிவில் இருந்து (bay) துபாய் செல்லும் எடிகாத் நிறுவனத்தி்ன் சரக்கு விமானம் திடீரென அந்த ரன் வேயில் நுழைய ஆரம்பித்தது.
இதைப் பார்த்த விமான நிலைய ஏப்ரான் பிரிவின் மேலாளர் யுகநாதன் அதிர்ந்துபோய் உடனே எடிகாத் விமான பைலட்டை தொடர்பு கொண்டு அதை உடனே நிறுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டது. இந்த விமானத்தை உரிய நேரத்தில் நிறுத்தியிருக்காவிட்டால் ரன்வேயில் ஓட ஆரம்பித்த பாரமவுண்ட் விமானத்துடன் அது நிச்சயம் மோதியிருக்கும்.
இந்தச் சம்பவத்தையடுத்து எடிகாத் விமானம் துபாய் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தரைக்கட்டுப்பாட்டுப் பிரிவின் அனுமதி பெறாமல் விமானத்தை ரன்வேக்குள் செலுத்திய அதன் விமானியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications