எனது நிலையில் மாற்றம் இல்லை - உறுதியாக இருக்கிறேன்: வைகோ
சென்னை: இலங்கைத் தமிழர்களைக் காக்க ஆயுதம் ஏந்திப் போராடுவேன் என்று நான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை. எனது நிலையில் உறுதியாக இருக்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறி வைகோ இன்று மாலை கைது செய்யப்பட்டார்.
அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று வைகோவை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் அவர் போலீஸ் வேனில் பலத்த பாதுகாப்புடன் ஏற்றப்பட்டார். அப்போது திரண்டிருந்த செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், இலங்கை இனப் பிரச்சினையிலிருந்து தமிழர்களைக் காக்க ஆயுதம் ஏந்திப் போராடுவேன் என்று நான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை. எனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
இலங்கை ராணுவத்திற்கு ரேடார்கள், ஆயுதங்களை வழங்கி, இலங்கைத் தமிழர்களைக் கொல்லும் போக்குக்கு பிரதமர் மன்மோகன் சிங் துணை போகிறார் என்று நான் கூறியதையும் இப்போது மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன்.
இலங்கை படைகளுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து, உளவுத் தகவல்களைக் கொடுத்து இலங்கைத் தமிழர்களுக்கு பெரும் துரோகம் இழைத்து வருகிறது மன்மோகன் சிங் அரசு என்றார் வைகோ.
வைகோ, கண்ணப்பனுக்கு முதல் வகுப்பு:
புழல் சிறையில் வைகோவுக்கு விஐபிக்களுக்கான முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் மெத்தை கட்டில், அமர்ந்து எழுதுவதற்கு மேஜை நாற்காலி, டிவி, நாளிதழ்கள் ஆகிய வசதிகள் உள்ளன.
தினமும் காலையில் சப்பாத்தி, பொங்கலும் மதிய உணவாக, சாப்பாடு, மோர், ரசம், பொறியல் வழங்கப்படும். இரவு சப்பாத்தி, சாப்பாடு ஆகியவை வழங்கப்படும். ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் மதியம் சிக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரது அறையையொட்டி உள்ள பிளாக்கில் நடப்பதற்கும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே போல புழல் சிறையில் கண்ணப்பனுக்கும்முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications