நிலவை நெருங்கும் சந்திராயன்:75,000 கி.மீ உயரத்தில்!

Subscribe to Oneindia Tamil

Chandrayan mission
பெங்களூர்: இந்தியாவின் சந்திராயன்-1 விண்கலம் தனது நிலவுப் பயணத்தில்20 சதவீதத்தை முடித்துள்ளது. தற்போது 75,000 கி.மீ. உயரத்தை நெருங்கியுள்ளது சந்திராயன்-1

இன்று காலை 5.48 மணி முதல் சந்திராயன் விண்கலத்தில் உள்ள 440 நியூட்டன் திரவ என்ஜின் இயக்கப்பட்டது. 16 நிமிடங்களுக்கு இது இயக்கப்பட்டது. இதன் மூலம், சந்திராயன் விண்கலம், பூமியிலிருந்து 74 ஆயிரத்து 715 கிலோமீட்டர் தூரத்தை எட்டியது என்று இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் சதீஷ் தெரிவித்தார்.

இன்றைய செயல்பாடு ஒரு சாதனை அளவு இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இதுவரை இந்திய செயற்கைக் கோள்கள் அதிகபட்சம் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தைத்தான் எட்டியுள்ளன. முதன் முதலாக சந்திராயன்-1 விண்கலம் 75 ஆயிரம் கிலோமீட்டரை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்திய விண்வெளி வரலாற்றில் இது முக்கிய சம்பவம். குறுகிய காலத்தில் இதை சாதித்துள்ளோம் என்றார்.

பூமியலிருந்து நிலா 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிலவின் சுற்றுப் பாதைக்கு நவம்பர் 8ம் தேதி சந்திராயன் -1 செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து நிலவு 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்.

சந்திராயன்-1 விண்கலத்தில் அனைத்துப் பகுதிகளும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த சில நாட்களில் சந்திராயன்-1 விண்கலத்தின் உயரம் மேலும் அதிகரிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+