பசும்பொன்: ஜெவுக்கு தரப்பட்ட பாதுகாப்பு-விவரம் கோரும் நீதிமன்றம்
சென்னை: பசும்பொன்னில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறித்த முழு விவரத்தை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பசும்பொன்னில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கார் உள்பட பாதுகாப்புக்கு வந்த கார்கள் மீது கல்வீச்சு நடந்தது.
இந் நிலையில் இன்று காலை அதிமுக வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்தனர்.
அதில், நேற்று பசும்பொன்னிற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்ற போது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. முறையான பாதுகாப்பு அளிக்காததால் தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ஏற்கனவே அவருக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. அவருக்கு இசட் பிளஸ் நிலைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பதை பசும்பொன் சம்பவம் மூலம் உறுதியாகத் தெரிய வருகிறது.
பாதுகாப்பு மறு ஆய்வுக் கமிட்டி கூட்டத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்க அரசு மறுக்கிறது.
உரிய பாதுகாப்பு தந்துள்ளோம் என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளதால், அரசின் மீது அவதூறு வழக்குத் தொடர அனுமதிளிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் செல்வம்,
ஜெயலலிதாவுக்கு போதுமான அளவுக்கு பாதுகாப்பு வழங்கினோம். யாரோ சிலர் திடீரென போலீஸ் வாகனம் மீது கல்வீசி உள்ளனர். நேற்றைய சம்பவத்தை கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறோம். இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்றார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதி, பசும்பொன்னில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்த முழு விவரத்தையும் அட்வகேட் ஜெனரல் மாசிலாமணியை தாக்கல் செய்யச் சொல்லுங்கள்.
மேலும் ஜெயலலிதாவின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த பாதுகாப்பு மறு ஆய்வுக் கமிட்டி கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதையும் அரசு தெரிவிக்க வேண்டும்.
இந்த விவரங்களை நவம்பர் 5ம் தேதி சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications