தீவிரவாதம் தான் பாக் எதிரி: இந்தியா அல்ல-ஓபாமா
வாஷிங்டன்: பாகிஸ்தானின் உண்மையான எதிரி தீவிரவாதிகளும், தீவிரவாதமும்தான், இந்தியா அல்ல என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் பாரக் ஓபாமாக தெரிவித்துள்ளார்.
சிஎன்என் தொலைக்காட்சிக்கு ஓபாமா அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானின் உண்மையான, மிகப் பெரிய மிரட்டல், எதிரி தீவிரவாதிகள்தான். இந்தியா அல்ல. இதை பாகிஸ்தான் தலைவர்கள் உணர வேண்டும், ஒப்புக் கொள்ள வேண்டும்.
பாகிஸதானில் தற்போது ஊசலாடும் ஜனநாயக அரசு அமைந்துள்ளது. இந்த அரசுக்கு அனைவரும், அனைத்து வகையிலும் ஆதரவு தர வேண்டும். ராணுவ உதவி மட்டும்தான் உதவி என்றில்லை. மாறாக வறுமையைப் போக்கவும், கல்வி அறிவை அதிகரிக்கவும் உதவ வேண்டும்.
பாகிஸ்தானில் கல்வியறிவு மிகவும் மோசமாக உள்ளது. அதை பாகிஸ்தான் அரசு போக்க வேண்டும் எனவே நான் அதிபராக வந்தால் ராணுவ உதவி தவிர்த்த பிற உதவிகளை அதிக அளவில் பாகிஸ்தானுக்கு செய்வேன்.
தற்போது பாகிஸ்தானின் மிகப் பெரிய எதிராக தீவிரவாதம் உள்ளது. இந்தியாவை விட இதுதான் பெரிய மிரட்டல். இது அவர்களது வரலாற்று எதிரி. அவர்களுடனேயே இந்த தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அதில் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் இன்னும் அமெரிக்க படைகளின் வேலை முடியவில்லை. இன்னும் அங்கு நாம் அதிகம் செலவிட வேண்டியுள்ளது. ஓசாமாவைப் பிடிக்க வேண்டியுள்து. அவர்களது செயல்பாடுகளை முடிக்க வேண்டியுள்ளது என்றார் ஓபாமா.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications