இலங்கை: ''கடைசி தமிழன் உள்ளவரை போர் ஓயாது''!
மதுரை: கடைசி தமிழன் உள்ளவரை ஆயுத்த்தைக் கீழே போடும் பேச்சுக்கே இடமில்லை. நிரந்தரத் தீர்வு வரும் வரை போர் ஓயாது என்று இலங்கை எம்பிக்கள் சிவாஜிலிங்கம், சிறீகாந்தா கூறியுள்ளனர்.
திண்டுக்கல்லில், மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இலங்கை எம்.பிக்கள்., சிவாஜிலிங்கம், சிறீகாந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் சிவாஜிலிங்கம் பேசியதாவது:
தமிழ்நாட்டில் உள்ள இன உணர்வு கண்டு இலங்கை அரசு பயப்பட ஆரம்பித்துவிட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தானைப் பிரித்தது போல் இலங்கையையும் பிரித்துக் கேட்டிருந்தால் தமிழர்களுக்கு இந்நிலை அங்கு ஏற்பட்டிருக்காது.
இதுவரை இலங்கை அரசு, தமிழர்கள் மீது 6,000 டன் வெடிகுண்டுகளை வீசியுள்ளது.
தமிழக அரசு கொடுக்கும் அரிசியை வைத்து சமைத்து சாப்பிடும் நிலை அங்கு இல்லை. போர் நடந்துகொண்டிருக்கும் போதே இந்த உதவி என்றால், அது மக்களுக்கு வாய்க்கரிசியாகத்தான் சென்று சேரும்.
உலகத்தில் பல நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டாலும் இலங்கையில் தடை செய்யப்படவில்லை. விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். கடைசி தமிழன் உள்ளவரை ஆயுதத்தைக் கீழே போடுவது நடக்காத ஒன்று என்றார் அவர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications