வீர. இளவரசன் உடல் சொந்த ஊரில் அடக்கம்
மதுரை: மதுரை மருத்துவமனையில் மரணமடைந்த மதிமுக எம்.எல்.ஏ வீர இளவரசனின் உடல், அவரது சொந்த ஊரான பள்ளப்பட்டியில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மதுரை, திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வீர. இளவரசன் நேற்று காலை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மூத்த தலைவர்கள், பெரும் திரளான தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து இறுதிச்சடங்கிற்காக அவரது உடல் சொந்த ஊரான பள்ளப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று காலை வீர.இளவரசனின் உடல் அவரது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சாமி, பொள்ளாச்சி ஜெயராமன், திமுக சார்பில் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட தலைவர்கள் வீர.இளவரசனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications