இந்தியாவை ஒதுக்குகிறாரா ஒபாமா?

பாகிஸ்தான் அதிபர் சர்தாரியுடன் கூட பேசிவிட்ட அவர் இந்தியப் பிரதமரை அவர் தொடர்பு கொள்ளவில்லை. இதன் மூலம் எடுத்த எடுப்பிலேயே அவர் இந்தியாவை ஒதுக்க ஆரம்பித்துவிட்டதாக குரல்கள் எழ ஆரம்பித்துவிட்டன.
ஆனால், இதைப் பெரிதாக்க வேண்டியதில்லை என்று கூறிய வெளியுறவு அமைச்சகம் நம்மை தென் கொரியா, நியூசிலாந்து, ஜப்பானுடன் ஒபாமா வைத்துப் பார்க்கவில்லை, ரஷ்யா, சீனா ஆகிய நாட்டுத் தலைவர்களுடன் பேசுகையில் நம்முடனும் அவர் பேசுவார் என்று கூறியிருந்தது.
இந் நிலையில் ஒபாமா நேற்று ரஷ்ய அதிபருடனும் சீன அதிபர் ஹூ ஜியான்டோவுடனும் பேசிவிட்டார். இதனால் நம்மை ஒதுக்குவது நிஜமோ என்ற லேசான கவலை வெளியுறவுத்துறையையும் தொற்றிக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில், பிரதமர் ஓமன், கத்தாரில் சுற்றுப் பயணத்தில் இருப்பதால் தான் அவர் நேற்று நம்முடன் பேசவில்லை என்றும் சமாதானம் கூறுகின்றனர். விரைவிலேயே அவர் பிரதமரைத் தொடர்பு கொள்வார் என்கின்றனர்.
அவர் யாருடன் முதலில் பேசுகிறார் என்று பார்ப்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமானது என்கிறார்கள்.
ஆனால் ஒபாமாவுக்கு அணு ஒப்பந்த விஷயத்தில் சின்ன கோபம் என்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தை ஆதரித்த ஒபாமா, இது தொடர்பாக பிரதமருக்கு ஒரு கடிதமும் எழுதினார்.
அந்தக் கடிதத்தில் இந்தியா அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்து போட வேண்டியதும் அவசியம் என்றரீதியில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஆனால், அந்த பகுதியை மட்டும் வெட்டி எடிட் செய்துவிட்டு, இந்தியா-அமெரிக்க அணு ஒப்பந்தந்துக்கு ஒபாமா முழு ஆதரவு என்றரீதியில் அவரது கடிதத்தை வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்தது.
இதை ஒபாமா ரசிக்கவில்லை என்கின்றனர்.
எடுத்த எடுப்பிலேயாப்பா....!
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்?












Click it and Unblock the Notifications