தேனி அருகே பல கோடி அளவுக்கு நில மோசடி
தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஆள் மாறாட்டம் மூலம் பல கோடி ரூபாய் நில மோசடி செய்து கோடிக் கணக்கில் சிலர் வங்கி கடன் பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையன் (60).
மகளின் திருமண செலவிற்காக தனது நிலத்தை காட்டி கடன் வாங்க வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் வில்லங்க சான்று வாங்கி வர அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதன்படி சுப்பையன் பத்திரப் பதிவு அலுவலகம் சென்ற போது, அங்கு சுப்பையனின் நிலம் வேறு ஒருவரின் புகைப்படம் ஒட்டப்பட்டு பவுன்ராஜ் என்பவருக்கு பவர் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
அவர் மூலம் வடுகபட்டியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவருக்கு கிரயம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனால் சுப்பையன் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தில் விசாரித்த போது சுப்பையனுக்கு சொந்தமான 6.50 ஏக்கர் நிலமும் அவரின் பெயரில் தான் இருந்துள்ளதும், ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் போலியாக பட்டா தயாரித்து மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.
இதேபோல சுமார் 42 விவசாயிகளுக்கு சொந்தமான 120 ஏக்கர் நிலம், ஆள் மாறாட்டத்தின் மூலம் திருப் பூரைச் சேர்ந்த சோமசுந்தரம், நரேஸ்பாபு, விஜய் ஆனந்த், சுஜாதா, நாச்சம்மாள், லோக நாதன் ஆகியோர் பெயர்களில் 2 பத்திரங் களாக பதிவு செய்யப்பட்டு தேனி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.2 கோடியே 10 லட்சம் வரை கடனும் பெற்றிருப்பது தெரிய வந்தது.
இதே போன்று சிலரது நிலங்கள் மோசடி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.
இச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கை கோரி மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications