பாலாவியை கைப்பற்றி விட்டதாக இலங்கை ராணுவம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
கிளிநொச்சி: கிளிநொச்சி அருகே உள்ள பாலாவி என்ற முக்கியப் பகுதியை கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியைக் கைப்பற்ற ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. ராணுவத்தின் கடும் தாக்குதலை சமாளித்து விடுதலைப் புலிகள் கிளிநொச்சியைத் தக்க வைக்கப் போராடி வருகின்றனர்.
மன்னார் - பூநகரி பகுதியில் தற்போது ராணுவம் முன்னேறி வருகிறது. இந்த நிலையில் கிளிநொச்சி அருகே உள்ள பாலாவி என்ற முக்கியப் பகுதியை பிடித்து விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சண்டையில் 11 விடுதலைப் புலிகள் உயிரிழந்ததாகவும் அது கூறியுள்ளது.
பாலாவி பகுதி முழுவதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாகவும், இதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கான பொருள் விநியோகம் பெருமளவில் தடைபட்டுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இருபபினும் இந்த செய்தியை புலிகள் உறுதிப்படுத்தவில்லை.












Click it and Unblock the Notifications