ஈராக் விமான விபத்தில் இந்தியர் உள்பட 7 பேர் பலி
துபாய்: ஈராக்கில் நடந்த விமான விபத்தில் இந்தியர் உள்ளிட்ட 7 பேர் பலியானார்கள்.
பலியானவரின் பெயர் ஜெயச்சந்திரன் அப்புக்குட்டன் (44). கேரளாவைச் சேர்ந்தவர். துபாயைச் சேர்ந்த பால்கன் ஏவியேஷன் குருபூ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சரக்குகளை ஏற்றி இறக்குவதைக் கண்காணிக்கும் மாஸ்டர் வேலையில் இவர் இருந்து வந்தார்.
இந்த நிறுவனத்தின் சரக்கு விமானத்தில் அப்புக்குட்டனும் மற்றவர்களும் சென்று கொண்டிருந்தபோது ஈராக்கில் ஏற்பட்ட விபத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 7 பேரும் பலியானார்கள்.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அப்புக்குட்டன் தவிர மற்ற 6 பேரும் பிரிட்டிஷ் கல்ப் இன்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வியாழக்கிழமை காலை பலூஜா அருகில் உள்ள அல் ஆசாத் விமான தளத்திலிருந்து விபத்துக்குள்ளான சரக்கு விமானம் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்குக் கிளம்பியது. சிறிது நேரத்தில் அதன் ரேடியோ தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் இது விபத்துக்குள்ளானது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications