சந்திராயனின் லேசர் கருவி இயங்கத் தொடங்கியது
பெங்களூர்: சந்திராயன்-1 விண்கலத்தில் உள்ள லேசர் கருவி இயங்கத் தொடங்கியுள்ளது. இதற்கான பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
சந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திராயன் -1 விண்கலம் தனது வேலையை திட்டமிட்டபடி தொடங்கியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு சந்திராயன் விண்கலத்தில் உள்ள மூன் இம்பாக்ட் பிராப் வெற்றிகரமாக சந்திரனின் தரைப்பரப்பில் இறங்கியது.
இதையடுத்து சந்திராயன் விண்கலத்தில் உள்ள லூனார் லேசர் ரேஞ்சிங் என்ற லேசர் கருவியை இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று வெற்றிகரமாக இயக்கினர்.
நிலவின் மேற்குப் பகுதியில் சந்திராயன் சென்று கொண்டிருந்தபோது இந்த லேசர் கருவி இயக்கி வைக்கப்பட்டது.
உடனடியாக அதிலிருந்து தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன. இதன் மூலம் லேசர் கருவி சீரிய முறையில் இயங்குவது புலனாகியுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திராயனில் உள்ள லேசர் கருவி, சந்திரனின் தரைப்பரப்பின் மீது அகச்சிவப்புக் கதிர்களைப் பாய்ச்சி அதன் பிரதிபலிப்பாக வரும் ஒளியை ஆராயும். மேலும் நிலவின் தரைப்பரப்பின் சரியான உயரத்தையும் அது கணக்கிடும்.
சந்திரனின் இரவிலும், பகலிலும், விநாடிக்கு 10 அளவீடுகளை இந்த லேசர் சாதனம் மேற்கொள்ளும். தொடர்ந்து இது இயங்கிக் கொண்டிருக்கும்.












Click it and Unblock the Notifications