வாகனங்களின் விலையை குறைக்க மாட்டோம்-பஜாஜ்

வேண்டுமானால் வட்டி விகிதத்தைக் குறைக்க அரசும் நிதி நிறுவனங்களும் முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிஐஐ எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் முன்னால் தலைவரான ராகுல் பஜாஜ் இதுகுறித்துக் கூறியதாவது:
இரு சக்கர மோட்டார் வாகனங்கள் சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகிவிட்டன. இவற்றின் விலையைக் குறைத்து ஒன்றும் ஆகப் போவதில்லை. பெரிய பொருளாதார மாற்றம் எதையும் கொண்டு வந்துவிடவும் முடியாது. அதைவிட, அனைத்து வங்கிகளும் சாதாரண மக்களுக்கு கடன் வழங்குவதில் மும்முரம் காட்டலாம். வட்டி விகிதத்தைக் குறைக்கலாம். இதன் மூலம் வாங்கும் சக்தி அதிகரிக்கும். தொழிலும் காப்பாற்றப்படும்.
வங்கிகள் வீட்டுக் கடன்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை வாகனக் கடன்களுக்கும் தரவேண்டும். இதற்கு மத்திய அமைச்சர் சிதம்பரமும், ரிசர்வ் வங்கி கவர்னரும் ஆவண செய்வார்களா..?, என்றார்.
அதேபோல சுங்க வரியைக் குறைப்பதால் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடாது என கருத்து தெரிவித்துள்ளார் பஜாஜ்.












Click it and Unblock the Notifications