புலிகள் கடும் தாக்குதல்-நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலி?

கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் கடுமையாக முயன்று வருகிறது. விமானப்படையின் துணையுடன் கடந்த பல நாட்களாக ராணுவம் போராடி வருகிறது. முதலில் கிளிநொச்சி நகருக்கு அருகில் வந்து விட்டோம் என்று கூறினர். ஆனால் இதுவரை அப்படி நடந்ததாக தெரியவில்லை.
விடுதலைப் புலிகள் அதிரடியான போர்த் திட்டங்களை வகுத்து இலங்கை ராணுவத்தினரை தற்போது நிலை குலைய வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3 முனைகளில் ராணுவம் தாக்குதலை தொடுத்து வருகிறது. கிளிநொச்சிக்கு வடக்கில் இருந்து ஒரு படையும், தெற்கில் இருந்து ஒரு படையும் மேற்கு பகுதியில் இருந்து மற்றொரு படையும் கிளிநொச்சியை நெருங்கி வருகிறது.
ஆனால் மூன்று முனைகளிலும் அவர்களின் முன்னேற்றத்தைத் விடுதலைப் புலிகள் தொடர்ந்து பல வார காலமாக தடுத்து போரிட்டு வருகின்றனர்.
வடக்கு பகுதியில் முகமாலை வழியாக முன்னேறி வந்த சிங்கள படையை விடுதலைப்புலிகள் அதிரடியாக தாக்கினார்கள். இதில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலை வரை நடந்த சண்டையில் மட்டும் 36 சிங்கள வீரர்கள் பலியானார்கள். 90 பேர் காயம் அடைந்தனர்.
அதற்கு முந்தைய நாள் சண்டையில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
இதே போல தெற்கு முனையில் மாங்குளம் என்ற இடத்திலும் கடும் சண்டை நடந்து வருகிறது. அங்கும் ஏராளமான சிங்கள வீரர்கள் பலியானார்கள்.
கிளிநொச்சி பகுதியில் கடந்த 3 நாட்கள் நடந்த சண்டையில் மட்டுமே 200 சிங்கள வீரர்கள் பலியாகி இருப்பதாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருப்பதாகவும் இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.
மாங்குளம் இன்னும் வீழவில்லை?:
மாங்குளம் பகுதியை கடந்த திங்கட்கிழமை ராணுவம் கைப்பற்றி விட்டதாக அரசு அறிவித்தது. அங்கு தான் இப்போது கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் இருந்து மாங்குளம் இன்னும் விடுதலைப் புலிகளிடம் தான் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
ராணுவ தரப்பில் நேற்று அதிகாலை தான் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு ஜெயவர்த்தனா மருத்துவமனைக்குக் நேற்று காலை காயமடைந்த ஏராளமான வீரர்கள் கொண்டு வரப்பட்டனர்.
ராணுவ விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வடக்கு பகுதிக்கு பறப்பதும் ராணுவ வீரர்கள் உடல்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு திரும்புவதுமாக இருந்தன.
ராணுவ தாக்குதல் தொடர்பான செய்திகளை இலங்கை பத்திரிகைகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு நடக்கும் உண்மையான தகவல்கள் வெளியே சரியாக தெரியவில்லை.
ஆனாலும் 3 நாள் போரில் சிங்கள வீரர்கள் 200 பேர் பலியாகி இருப்பதாக இலங்கை பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications